கேன்சரா – அஞ்ச வேண்டாம்! Oct – 2025

-தொடர்ச்சி
கேன்சர் வராமல், வளராமல், பரவாமல்  தடுப்பதற்கான உணவுக் காரணிகள் பற்றி செய்தித்தாள்களில் வெளி வந்தவை பற்றி இந்த இதழில் அறிந்து கொள்வோம்.

செய்தித்தாள்:

புகழ்பெற்ற ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாகும் செய்தித்தாள்களில் அவ்வப்போது வெளிவரும் உணவு மருத்துவம் பற்றிய செய்திக் குறிப்புகளில் சில கீழே தரப்பட்டுள்ளன.

22.2.1999-The Hindu – கருநீலவண்ண திராட்சைப் பழச்சாறு, சிவப்பு ஓயின், (Red Wine), கிரீன் டீ (Green Tea), பிளாக் டீ (Black Tea) முதலியன கடுமையான கேன்சர் தடுப்புச் சக்திக்காரணிகள், நச்சு நீக்கமும் (Free radicals) செய்கின்றன.

30.3.2001-The Hindu – கருநீலமுள்ள (Purple) கத்தரிக்காயில் உள்ள வண்ணக்காரணி கேன்சர் எதிர்ப்புத்திறன் கொண்டது.

13.11.2002 – The Hindu  – பப்பாளிக்கும் கேன்சர் தடுப்பு குணமுண்டு.

8.1.2003 –  The Hindu – எழுமிச்சப்பழம் போன்ற புளிப்புப் பழங்களுக்குச் சாதாரண சளி முதல் கேன்சரைத் தடுக்கும் சக்தி உண்டு.

11.11.2003 – The Indian Express – ரெய்ஷி (Reishi), ஷிடேக் (Shitake) வகைக் காளான்கள் கேன்சரைத் தடுக்கும் குணம் கொண்டவை.

2.9.2003 The Indian Express –  மஞ்சள், கேன்சர் செல் வளர்ச்சிக்கு உதவும் புரதத்தைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் பெற்றது.

30.3.2004 – The Hindu –  கிரீன் டீ கேன்சர் எதிர்ப்புத் திறன் கொண்டவை. அத்துடன் வீக்கம் குறைக்கும் (Anti-inflammatory), நுண்ணுயிர்க்கொல்லி (Anti-carcinogenic) கொண்டவை.

15.4.2004 – The Hindu– பிஸ்தாப் பருப்புக்குக் கேன்சர் தடுப்புச் சக்தியுண்டு.

25.5.2004 – The Indian Express– ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் லவங்கப்பட்டைத்தூள், கலந்து மூன்று வேளை ஒரு மாதம் சாப்பிடுவது கேன்சர் தடுப்பு முறைகளில் ஒன்று.

30.8.2004 – The Hindu– முருங்கை மரத்தின் பூ, இலை, வேர் மூன்றுமே கேன்சர் எதிர்ப்புத் திறன் கொண்டவை.

30.1.2005 – The Deccan Chronicle– கேரட்டில், மஞ்சளும், ஆரஞ்சு வண்ணமும் கலந்துள்ளதால் டி.என்.ஏ.வில் மாறுதல் நிகழும் வாய்ப்பு குறைவு. வடஇங்கிலாந்தைச் சேர்ந்த நியூகேசல் பல்கலைக்கழக விஞ்ஞானியும், தென் டென்மார்க் பல்கலைக்கழக விஞ்ஞானியும் இணைந்து விட்ட அறிக்கையும் இதை ஏற்றுக்கொள்கிறது.

1.5.2005 – The Hindu–  கோதுமைப்புல் (Wheat grass), பாலக்கீரை (Spinach),  கேல் (Kale),  ஆல்பா ஆல்பா (Alfalfa), பார்லிப்புல் (Barley Grass) முதலியன கேன்சருக்கான மருந்து இல்லை என்றாலும் கொடுக்கப்படும் மருந்துகளுக்கு துணையாக இருக்கும்.

17.5.2005 – The Hindu- ஆப்பிளில் உள்ள வேதியியல் புராஸ்டெட்(prostate) கேன்சரைத் தடுக்கிறது.

21.9.2005 The Hindu- மஞ்சள் பூசணி, மக்காச்சோளம், பப்பாளி, ஆரஞ்சு, சிவப்புக் குடைமிளகாய் முதலியன நுரையீரல் கேன்சரைத் தடுக்கும்.

28.9.2005 The Hindu- ஆலிவ் ஆயிலில் உள்ள இரசாயனம், அத்துடன் A.D.E.K முதலிய வைட்டமின்களும், கேன்சர் தடுப்புச் சக்தி கொண்டவை. DNAவை அழிக்கும் கார்சினோ ஜீன்களைத் தடுக்கும் இரசாயனப் பொருள் பூண்டில் இருக்கிறது. கிவி (kiwi) பழத்தில்  வைட்டமின் C உள்ளது. ரத்தத்தில் E குறைந்தாலும் கேன்சர் வரலாம்.

11.11.2005 – The Deccan Chronicle – கடல்பாசி (Sea Weed) எனப்படும் ஸ்பைருலினா(Spirulina) கேன்சர், எயிட்ஸ் போன்றவற்றுக்குச் சிறந்த மருந்தாகக் கருதுகின்றனர்.

20.12.2005 – தினமணி – இரத்தத்தில் வைட்டமின் E இருந்தால் கேன்சர் அணுக்கள் இருக்க முடியாது. கறுப்புத் திராட்சைப் பழம், சிகப்புத் தக்காளி, கண் கேன்சரைத் தடுக்கும். பீட்ரூட்சாறு பொதுவாகக் கேன்சருக்கு நல்ல மருந்து. கேரட் சாறு ரத்தப் புற்றுக்கு நல்லது.

4.6.2006 – The Hindu– இஞ்சி – ஓவரி(ovary) கேன்சர் செல்களையும், மிளகு – பேங்கிரியாஸ் (pancreas) கேன்சர் செல்களையும் கொல்கிறது. புராக்கோலி, காலிபிளவர் முதலிய இனம் சார்ந்த காய்களில் கேன்சர் காரணிகளைத் தடுக்கும் வேதியியல் பொருட்கள் உள்ளன.

7.8.2006 – The Deccan chronicle – துளசி, புதினா முதலியன கேன்சரைக் குணப்படுத்துகின்றன. அவை நச்சுத்தன்மை (free radicals) அகற்றும் ஆற்றல் கொண்டவை என இராஜஸ்தான் பல்கலைக்கழக ஆராய்ச்சி கூறுகிறது. 17.04.2009 – Times of India – புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு காய்கனிகள் முரண்பட்ட பலனாகக் கோலன் கேன்சர் வாய்ப்பளிக்கும்.

-தொடரும்

தயவுடன் சித்த மருத்துவர் Dr.R.மாணிக்கவாசகம்
தமிழ்நாடு சித்தா மெடிக்கல் கவுன்சில்,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top