அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
கனடாவில் நடைபெற்ற வள்ளலார் 200 விழா இந்திய-கனடா நாட்டின் உறவைப் புதுப்பிக்கும் என நம்புவோம்.
கனடா சன்மார்க்க சங்கம் தலைமையில் மற்றும் பல அமைப்புகளால் அக்டோபர் 15 – 2023 அன்று வள்ளலார் 200 விழா கொண்டாடப்பட்டது .
இந்த நிகழ்வில்…
பியூமான்ட் சட்டமன்ற உறுப்பினர் திரு. பிராண்டன் லுண்ட்டி,
இந்திய சபைகள் கூட்டமைப்பின் தலைவர் திரு. புனீத் மஞ்சன்டா,
அல்பர்டா சிவில் கோர்ட் மஜிஸ்த்ரேட் திரு. அரண் வெய்லன்
-ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.
வள்ளலாரின் திருவருட்பா பாடல்கள், பரதம், இசை, பட்டிமன்றம், மாணவர்களின் சிறப்பு நிகழ்ச்சிகள், சன்மார்க்கக் கொடி ஏற்றுதல் போன்ற நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.
இந்திய மற்றும் தமிழ்சங்கங்கள் சிறந்த ஆதரவை நல்கினர். சுமார் ஐம்பதற்கும் மேற்பட்ட மாணவச் செல்வங்கள் திருவருட்பா ஒப்பித்தல் போட்டியில் கலந்து கொண்டனர். தங்கநாணயம். வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட்டது .
விழாவிற்கு வந்த அனைவருக்கும் சிறப்பு சைவ விருந்து அளிக்கப்பட்டது . விழாவிற்கு வந்த அனைவருக்கும் வள்ளலாரின் திருஉருவப் படம், அருட்பா, திருவிளக்கு மற்றும் தனிப்பெருங்கருணை குடும்ப இதழ் வழங்கப்பட்டது . விழாவிற்கு வந்த அனைவரும் தங்கள் இல்ல திருமண நிகழ்வு நடப்பதை போன்று பங்கு பெற்றனர்.
மனநிறைவான மகிழ்ச்சியான நிகழ்வு வள்ளல் பெருமானாரின் தனிப்பெருங் கருணையால் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வை ஒருங்கிணைத்த தயவு திரு மோகன் இராமசாமி ஐயா, தயவு திரு செல்வக்குமார் ஐயா அவர்களை சன்மார்க்க உலகம் பாராட்டி மகிழ்கிறது.
தனிப்பெருங்கருணை குடும்ப இதழ் ஊடக உதவியை நல்கி விழாவினை சிறப்பித்தது.
நன்றி!
-தயவுடன் தனிப்பெருங்கருணை ஆசிரியர் குழு.



கட்டுரை அருமை வாழ்த்துக்கள்