மலேசிய மண்ணில் சன்மார்க்க திருவிழா!

வள்ளற் பெருமானாரின் 200வது ஆண்டு வருவிக்கவுற்ற தினம் உலகெங்கிலும் உள்ள சுத்த சன்மார்க்க அன்பர்களால் சென்ற ஆண்டு அக்டோபர் முதல் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழக அரசும் வள்ளற் பெருமானாரின் 200வது வருவிக்க உற்ற ஆண்டை கொண்டாடும் விதத்தில் சென்ற ஆண்டு அக்டோபர் முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் வள்ளலாரின் 200வது வருவிக்கயுற்ற தினத்தை விமரிசையாக கொண்டாடி வருகிறது. உலகெங்கிலும் உள்ள நாடுகளிலும் வள்ளற்பெருமானாரின் 200வது ஆண்டு வருவிக்கயுற்ற தினம் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 2023, மலேசிய நாட்டில் வருகிற செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் கோலாலம்பூர் மலாயா பல்கலைக்கழகம் துங்கு வேந்தர் மண்டபத்தில் இரண்டு நாள் பன்னாட்டு கருத்தரங்காக வள்ளலாரின் 200வது ஆண்டு வருவிக்கவுற்ற தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த 2 நாள் கருத்தரங்கத்திலே உலகெங்கிலும் இருந்து சுத்த சன்மார்க்க அருளாளர்கள், அன்பர்கள், பேச்சாளர்கள், பாடகர்கள் மற்றும் அறிஞர்கள் கலந்து கொண்டு சுத்த சன்மார்க்க நெறிகளையும், கோட்பாடுகளையும், வள்ளற் பெருமானாரின் அருள்நெறி விளக்கங்களையும் வழங்கினார்கள். இந்த நிகழ்வைப் பதிவு செய்ய அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. பெருமானார் கருணையில் விழா இனிதே நடந்து முடிந்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top