இருவாச்சி கருவாச்சு
மலைக்காடு உருவாச்சு
அன்பான ஜோடி இது
மலைக்காடு உருவாச்சு
அன்பான ஜோடி இது
அழகான ஜோடி இது
ஆனந்த ஜோடி இது
ஆச்சரிய ஜோடி இது
இணைபிரியா ஜோடி இது
இன்பமான ஜோடி இது
உண்மையான ஜோடி இது
உயர வாழும் ஜோடி இது
ஊட்டி வளர்ந்த ஜோடி இது
ஊக்கமான ஜோடி இது
மலைக்காட்டு பறவை இது
மாண்பான பறவை இது
சாகும் வரை சேர்ந்து வாழும் சந்தோஷப் பறவை இது
தேடித் தேடித் தேர்வு செய்து சேர்ந்து வாழும் பறவை இது

ஒருவனுக்கு ஒருத்தி என்ற இல்லற வாழ்வில் இசைவோடு சேர்ந்து வாழும் சேர நாட்டுப் பறவை இது
கூடு கட்ட தெரியாது, கூடி வாழும் பறவை இது
மரப்பொந்தில் வாழ்ந்துவரும் மாண்பான பறவை இது
தன் அன்பான ஆணை நம்பி, சிறகை உதிர்த்து, சந்ததி வளர்க்க முன்வந்தாள் பெண் இருவாச்சி
சிறிய பொந்தில் சிறைப்படுத்திக் கொள்ளும் தியாகப் பெண் இருவாச்சி
பொல்லாத பாம்பிடம் தப்பிக்கப் பொந்தை மறைத்த விஷச் சுவர்க் கட்டும் பொறுப்பான ஆண் இருவாச்சி.
அலகு மட்டும் வெளியில் வர ஏதுவான அழகான வீடு இது
உணவுக்காக எட்டிப் பார்த்து காத்திருக்கும் அடைகாக்கும் பெண் இருவாச்சி
தேடி அலைந்து நித்தம் நித்தம் உணவு தேடி அழகான அலகினாலே அன்பு கலந்து ஊட்டிவிடும் ஆண் இருவாச்சி
ஏழு பிறவி வரம் தொடரும் இந்த ஏகாந்தக் காதல் இது
ஏக்கமான காதல் இது குஞ்சுகளைப் பெற்றெடுத்தாள் பெண் இருவாச்சி
ஆண் இருவாச்சியின் உழைப்பும் அன்பும் சொல்லி மாளாது
தானுண்டு பொந்தில் வாழும் தன் இணைக்கும், குஞ்சுகளுக்கும்
மூன்று வேளை உணவு கொடுத்தும் தனிமையில் தவமிருந்தது ஆண் இருவாச்சி
தன்னை யாரும் வேட்டையாடினால் தன்னை நம்பி
பொந்தில் காத்திருக்கும் பெண் இருவாச்சியும் குஞ்சுகளும் அழிந்து விடுமே
என்ற அச்சத்தில் கவலையோடு காத்திருந்தது ஆண் இருவாச்சி
குஞ்சுகள் பெரியதாகப் பெண் இருவாச்சிக்குச் சிறகு வரும் வரை நித்தம் இந்த போராட்டம்…
காலம் கனிந்தது, குஞ்சுகள் வளர்ந்தது, பெண் இருவாச்சியும் புதுப் பொலிவு பெற்றது,
பொந்தை உடைத்து தன் குஞ்சுகளுடன் வெளிவந்தது சுதந்திர பெண் இருவாச்சி
தன் அன்பான பெண் இருவாச்சியையும், அழகான குஞ்சுகளையும் கண்ட ஆண் இருவாச்சி அள்ளி அணைத்துக் கொண்டது.
பிறகு குடும்பத்துடன் ஆனந்தமாய் சிறகடித்து பறந்து சுதந்திர காற்றை சுவாசித்தது அந்த இருவாச்சி குடும்பம்
அருகி வரும் இருவாச்சி இனம் காக்க, மலைகளில் வளரும் உயர்ந்த மரங்களை வெட்டாமல் இருவாச்சி குடும்பம் வாழ வழி செய்வோம்…. கடவுள் தேசத்தின் தேசியப் பறவை இது.
கடவுள் தேசத்தின் தேசியப் பறவை இது.
உங்கள் நண்பன்
முருகேசன் தம்பிஐயன்
