அருள்மருத்துவம்: இருதய அடைப்பை எளிதில் நீக்க!

தயவு குடியிருக்கும் நம் இருதயத்தைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம். தாமரைக் கமலத்தில் உள்ள இதழ்களைப் போல் நம் இருதயத்திலும் 16 இதழ்கள் உண்டு. அதனாலேயே இருதயக் கமலம் என்று இதற்கு மற்றுமொரு பெயரும் உண்டு.

இரண்டு வெவ்வேறு, இரத்தம் உள் செல்லும் / வெளி செல்லும் வாசல்கள் உண்டு. சுத்த ரத்தம் இருதயத்திலிருந்து வெளி செல்வதற்காகவும், அசுத்த ரத்தம் இருதயத்தினுள் புகுவதற்காகவும் இந்த வாசல்கள் இறைவனால் படைக்கப்பட்டுள்ளன.

இருதயத்தில் ஏற்படும் அடைப்பை நீக்கும் ஒரு எளிய மருத்துவத்தை நமது அருள் மருத்துவர் தயவு, ஜகத்குரு ஐயா நமக்காக எடுத்துரைத்த பதிவை இங்கு உங்களுக்காக கட்டுரையாக வெளியிட்டுள்ளோம்.

கடந்த 2019 ஆம் ஆண்டு, ஒருவருக்கு 15 நாட்களில் இருதய அடைப்பு விடுபட்டு அவர் முழுவதுமாக நோயிலிருந்து காப்பாற்றப்பட்ட அந்த அற்புதத்தைப் பற்றி அவர் அகமகிழ்ந்து கூறியுள்ளார். 

இருதய அடைப்பை நீக்கும் வீட்டு மருத்துவக் குறிப்பு விபரம் :

கேரட் சாறு – 30 மி.லி

சின்ன வெங்காயம் சாறு – 30 மி.லி

அர்ஜுனாரிஷ்டம் கலவை ஒரு தேக்கரண்டி அளவு (இதை செய்யும் முறை கீழே விவரிக்கப் பட்டுள்ளது.)

இவை மூன்றும் கலந்த கலவையை சிறிது வெண்ணீருடன் கலந்து காலையிலும் மாலையிலும் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பாட்டிற்கு பிறகு உட்கொள்ள வேண்டும். இதுவே இருதய அடைப்பை சரி செய்யும்  பிரதான மருந்து. இது தவிரவும் சில அருள் மருந்துகள்  சேர்த்துத் தந்து அவரது இருதய அடைப்பை சரிப்படுத்தி உள்ளார்.

இது ஒரு அற்புதமான அனுபவ வைத்தியம். இந்த வைத்தியத்தில் சிறிய வெங்காயத்தின் பங்கு என்ன என்பதையும், அர்ஜுனாரிஷ்டம் என்பது எது, அர்ஜுனாரிஷ்டக் கலவை எப்படி தயார் செய்வது என்பதையும் அருள் மருத்துவர் கூறியபடி கீழே விவரித்துள்ளோம்.

இரத்தத்தை நீர்மைப்படுத்தும் சிறிய வெங்காயம்:

இரத்தத்தை நீர்மைப்படுத்தும் ஆஸ்பிரின் எனும் வேதியல் பொருள் இயற்கையாகவே இந்த சிறிய வெங்காயத்தில் உண்டு. இரத்த அழுத்த வேறுபாடுகளால் இரத்தம் உறைந்தோ, இரத்தம் அடர்த்தியடைந்து கெட்டியாகி கட்டி போல் ஆங்காங்கே இருதய பாதையை அடைத்துக் கொண்டாலோ, இரத்தத்தின் அடர்த்தியைக் குறைத்து நீர்மைப் படுத்த வேண்டும்.

இந்த வேலையை சிறிய வெங்காயம் மிகச் சிறப்பாக செய்யும். இதை கேரட் சாறு மற்றும் அர்ஜுனாரிஷ்டத்துடன்  சேர்த்து எடுத்துக் கொள்ளும் போது  அடைப்பை முற்றிலும் மிக விரைவில் நீக்கிவிடும். 

அர்ஜுனாரிஷ்டம் எனும் மருதம்பட்டை :

மருதம்பட்டையில் இயற்கையாக இருக்கும்

கார்டியோ க்ளைகோசைட்ஸ் எனும் அல்கலாய்டு இருதயத்தை பலப்படுத்தும் குணமுடையது. இரத்தத்தால் இருதயத்திற்குள் ஏற்படும் வெவ்வேறு அழுத்த மாற்றங்களை சீரமைக்கும் பணியை இந்த மருதம்பட்டை பார்த்துக் கொள்கிறது. 

அர்ஜுனாரிஷ்டக் கலவை :

அர்ஜுனாரிஷ்டம் இஞ்சி பூண்டு கலந்த கலவை எப்படி தயார் செய்வது ?

நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் அர்ஜுனாரிஷ்டம் பொதுவாக 450 மி.லி இருக்கும். அதில் 100 மி.லி அளவு தனியாக பிரித்து விட்டு மீதமுள்ள 350 மி.லி அர்ஜுனாரிஷ்டத்துடன் கலவை தயார் செய்ய வேண்டும்.

– அர்ஜுனாரிஷ்டம் – 350 மி.லி

– தெளிவெடுத்த இஞ்சிச்சாறு -100 மி.லி

( தோல் நீக்கிய இஞ்சியை இடித்து சாறு பிழிந்து சிறிது நேரம் வைத்து அதன் கீழ் மட்டத்தில் சுண்ணாம்பு தங்கியவுடன் அதை தெளிவாக எடுத்துப் பிரித்து எடுத்த இஞ்சிச்சாறு )

– பூண்டு சாறு – 50 மி.லி

இவை மூன்றையும் கலந்து நன்றாகக் குலுக்கி ஒரு புட்டியில் அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதுதான் அர்ஜுனாரிஷ்டக் கலவை செய்யும் முறை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top