இணையத்தில் சன்மார்க்கம்-A TRUE GOD

இணையதள அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!

இந்த இதழில் நாம் காணவிருக்கும் இணைய தளம் “atruegod.org” என்னும் இணையதளம் ஆகும். மதுரையைச் சேர்ந்த N .இளங்கோ என்கின்ற A.P.J. அருள் என்னும் அன்பரால் இந்த இணைய தளம் நடத்தப்பட்டு வருகின்றது. 

அன்பர் A.P.J. அருள் வள்ளல் பெருமான் கூறிய முறையில் மட்டுமே சத்ய ஞான சபையில் வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தில் போராடியதோடு மட்டுமல்லாமல் அதற்கான வெற்றியும் கண்டவர்.

வள்ளல் பெருமானின் முடிந்த முடிவான கொள்கை என்பது “சமய மத சார்பற்ற சுத்த சன்மார்க்க தனிநெறி” என்கின்ற கருத்தை வலிமையாகக் கூறுகின்றது இந்த இணையதளம். 

“வள்ளலாரின் முடிந்த முடிவான கொள்கை- சமரச சுத்த சன்மார்க்கம்” எந்த ஒரு சமய மத மார்க்கங்களின் கீழ் அமையப் பெற்ற மார்க்கம் அல்ல. தான் வைத்திருந்த சமயப் பற்றை கைவிட்டு விட்டு ஒரு புதிய தனி உண்மைப் பொது நெறியை கண்டுகொண்டு வள்ளல் பெருமான் உலகிற்கு வெளிப் படுத்தினார். அதை நாம் அனைவருக்கும் வெளிப் படுத்துவதே இந்த இணைய தளத்தின் நோக்கமாகும் என்று இந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வள்ளல் பெருமானின் வாழ்வியலை உணர்த்தும் “பெருங்கருணைக் கடவுள்” என்கின்ற குறும்படம் மற்றும் வள்ளல் பெருமானுடைய வரலாறு இவை இரண்டும் இங்கு பதிவிடப்பட்டுள்ளது.

1. வள்ளல் பெருமானின் முக்கிய சத்திய வாக்கியங்கள்.

2. நடந்ததை மறப்போம்! இனி உண்மை அறிவோம்!

3. ஆண்டவரே எதற்காக நான் உன்னை வாழ்த்தி வணங்க வேண்டும்? 

முதலிய பல கட்டுரைகள் மற்றும் காணொலிகள் இந்த இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது. வள்ளல் பெருமானின் முடிந்த முடிவான கொள்கை “சமரச சுத்த சன்மார்க்கமே!” என்பதை தெளிவாக இந்த இணையதளம் விளக்குகின்றது.

அன்பர்கள் அனைவரும் இந்த இணைய தளத்தைப் பார்த்து பயன்பெற வேண்டுகின்றோம்.

தயவுடன் திரு.ஆனந்த பாரதி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top