ஆன்ம நேய அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!
இணையத்தில் சன்மார்க்கம் என்னும் தொடரில் இந்த மாதம் நாம் தெரிந்து கொள்ள இருக்கும் இணையதளம் https://arularivu.com என்னும் தளம் ஆகும். இந்த இணைய தளம் ஒரு முழுமையான கற்றல் இணையதளம் ஆகும். தமிழ் / ஆங்கிலம் தெரிந்தவர்கள் வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்கத்தை முறையாக இணையதளத்தில் வாயிலாக அறிய இந்த இணைய தளம் துணை செய்கின்றது.
“இணையவழியில் ஞான கல்வியை பயிற்றுவிப்பது. இந்த திட்டத்தின் மூலம் வடலூர் வள்ளல் பெருமான் அருளிய சுத்த சன்மார்க்கத்தின் ஞானம், யோகம், வைத்தியம் போன்ற பல்வேறு ஞானக் கல்வியை பெரியோர்கள், சிறுவார்களுக்கு பல்வேறு பாடத்திட்டங்களின் மூலம் கற்பித்தலே இந்த திட்டத்தின் நோக்கம்” என்று இந்த இணையதளத்தில் இதன் நோக்கம் விளக்கப்பட்டுள்ளது.
திரு. நவனீத் மற்றும் திருவண்ணாமலை வள்ளலார் மிசன் சன்மார்க்க அன்பரால் இந்த இணையம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.
இணையத்தின் முகப்பு பகுதியில் சன்மார்க்க பாடங்களைப் பற்றிய தலைப்புகள் காணப்படுகின்றது.
அந்த தலைப்புகளை சொடுக்கினால் அந்தக் குறிப்பிட்ட பாடத்திற்கு நம்மைக் கொண்டு செல்கின்றது. பாடங்களை கற்ற பிறகு அதற்குரிய இணைய வழி சான்றிதழ்களும் வழங்கப்படும்.
பாடங்களைப் படிக்க நாம் முதல் முறை பதிவு செய்வது அவசியம்.
கீழ்க்கண்ட பகுதிகளில் இணையதளம் விரிவுப் படுத்தப்பட உள்ளது,
இந்த இணைய தளத்தில், 5 நிலை வகுப்புகள் உள்ளன. அவை முறையே,
- தொடக்க நிலை,
- இடை நிலை
- உயர் நிலை
- மேல் நிலை
- முது நிலை
மேலும் விவரங்களுக்கும், பாடத் திட்டம் பற்றி விவரம் அறியவும் இணைய தளத்தைக் காணவும்.
இந்த சிறப்பான இணைய தளத்தை அன்பர்கள் பயன்படுத்தவும், உலக மக்களுக்கு அறிமுக படுத்தவும் அன்போடு வேண்டுகின்றோம். நன்றி!
—தயவு ஆனந்தபாரதி
