குறள்.007: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்…
குறள்.260: பொருள் ஆட்சி போற்றாதவர்க்கு இல்லை…
📑 திருக்குறள்.007📑
●●●●●●●●●●●●●●●●●●
📑 தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. 📑
📑 பொருள் :தனக்கு யாதொன்றும் ஒப்புமை இல்லாதவனின் திருவடிகளை சேர்ந்தார்க்கு அல்லாமல், பிறர்க்கு, மனக்கவலையை மாற்றுதல் அரிதாகும். 📑
-வள்ளுவர்.
🪔 திருவருட்பா. 🪔
●●●●●●●●●●●●●●●●
🪔வெம்பும் உயிருக்கு ஓர் உறவாய் வேளை எமனும் வருவானேல்
தம்பி தமையன் துணையாமோ தனையர் மனைவி வருவாரோ
தும்பைக் குடலை எடுக்காமல் துக்க உடலை எடுத்தேனே
🪔தொல்லைக் குடும்ப துயரதனில் தொலைத்தேன் அந்தோ காலமெலாம்
அல்லல் அகற்றிப் பெரியோரை அடுத்து மறியேன் அரும்பாவி
வில்வக் குடலை எடுக்காமல் வீணுக் குடலை எடுத்தேனே
🪔அவல வயிற்றை வளர்ப்பதற்கே அல்லும் பகலும் அது நினைவாய்க்
கவலைப்படுவது அன்றி சிவ கனியைச் சேர கருதுகிலேன்
குவளைக் குடலை எடுக்காமல் கொழுத்த உடலை எடுத்தேனே.
🪔துன்பு அறுத்து ஒரு சிவதுரிய சுகந்தனை
அன்பருக்கே தரும் அருட்பெருஞ்ஜோதி.
–வள்ளலார்.
📑திருக்குறள்.260📑
●●●●●●●●●●●●●●●●●
📑 பொருள் ஆட்சி போற்றாதவர்க்கு இல்லை அருள் ஆட்சி
ஆங்கு இல்லை ஊன் தின்பவர்க்கு.📑
📑 பொருள் : பொருள் உடையவராக இருக்கும் தகுதி அப்பொருளைக் காப்பாற்றதவர்க்கு இல்லை ; அவ்வாறே , அருள் உடையவர் ஆகும் தகுதி ஊனைத் தின்பவர்க்கும் இல்லை. 📑
-வள்ளுவர்.
🪔 திருவருட்பா.🪔
●●●●●●●●●●●●●●●
🪔 வன்புடையார் கொலைகண்டு புலை உண்பார் சிறிதும்
மரபினர் அன் றாதலினால் வகுத்த அவர் அளவில்
அன்புடைய என் மகனே பசி தவிர்த்தல் புரிக
அன்றி அருட்செயல் ஒன்றும் செயத்துணியேல் என்றே
இன்புற என் தனக்கிசைத்த என் குருவே எனைத்தான்
ஈன்றதனித் தந்தையே தாயே என் இறையே
துன்பறு
மெய்த்தவர் சூழ்ந்து போற்று திருப் பொதுவில்
தூய நடத்தரசே என் சொல்லும் அணிந்தருளே. 🪔
🪔கொல்லா நெறியே குருவருள் நெறி எனப்
பல்கால் எனக்குப் பகர்ந்த மெய்ச் சிவமே. 🪔
–வள்ளலார்.

