வள்ளுவரும் வள்ளலாரும் (குறள்.353,186,845)

குறள்.353: ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு

குறள்.186: பிறன்பழி கூறுவான் தன்பழி

குறள்.845: கல்லாத மேற்கொண்டு ஒழுகல்

📑 திருக்குறள்.353.📑

●●●●●●●●●●●●●●●●●●●●●●

📑ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்

வானம் நணிய துடைத்து. 📑

📑பொருள் : ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு 

அடைந்துள்ள இவ்வுலகை விட அடைய வேண்டிய 

மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.📑

வள்ளுவர்

🪔 திருவருட்பா. 🪔

●●●●●●●●●●●●●●●●●●

🪔ஐயமுந் திரிபு மறுத்தென துடம்பினுள்

ஐயமு நீக்கிய வருட்பெருஞ் ஜோதி  – 20 🪔

விளக்கம்: ஐயம் என்பது உண்டா, இல்லையா நடக்குமா, நடக்காதா, வருமா, வராதா முடியுமா, முடியாதா என்பது போன்று மனதிலே, எழும் சந்தேகமாகும்.

திரிபு என்பது ஒன்றை மற்றொன்றாகத் தவறாக நினைப்பது. அதாவது இரவிலே ஒரு கட்டையைப் பார்த்துக் கள்வனோ என்று திகைப்பதும், கீழே வளைந்து கிடக்கும் ஒரு கயிறைப் பாம்பாக எண்ணிப் பயப்படுவதும், கிளிஞ்சலை வெள்ளியாக எண்ணி ஏமாறுவதும், பித்தளையைப் பொன்னோ என எண்ணுவதும் திரிபு அல்லது மயக்கம் என்பார்கள்.

மார்பகத்திலே சளி பெருக மூச்சு விட முடியாமல் திணற வைக்கும் நோய்வயப்பட்டு மரணப் படுக்கையில் உள்ளவர்க்கு  இவ்வாறு  நிகழுமானால்  மரணம் உடனே சம்பவிக்கும் என்பார்கள். இந்தச் சீதளத்தைத்தான் உடம்பினுள் ஐயம் என்கின்றார்.

மனதிலே உண்டாகிய சந்தேகத்தையும் மயக்கத்தையும் அறுத்து எனது உடம்பினுள் இருந்த சீதளத்தால் ஏற்படும் ஈரச் சளியையும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி.– வள்ளலார்.

📑 திருக்குறள்.186.📑
●●●●●●●●●●●●●●●●●●

📑பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.
📑

–வள்ளுவர்.

பொருள் : மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்

🪔 திருவருட்பா.🪔
●●●●●●●●●●●●●●●●

🪔 பிறர் குற்றம் விசாரம் செய்யாமை என்ற ஒரு ஒழுக்கத்தை போதிக்கிறார்.🪔

விளக்கம்:
பிறர் குற்றத்தை நாம் விசாரம் செய்யும் போது அந்த குற்றம் சார்ந்த எண்ணங்கள் நம் மனம், புத்தி, சித்தம் அகங்காரத்தின் வழியில் சென்று அதன் விளைவாக தீவினை பதிவுகள் நம்மில் பதிந்து விடும். அதனால் மீண்டும் மீண்டும் பிறவி எடுக்க தள்ளப்படுவோம். ஆக பிறர் குற்றம் விசாரம் செய்வது நம் ஆன்ம நேய ஒருமைப்பாட்டிற்கு ஒரு தடையாக அமைந்துவிடும் என்பதால் பிறர் குற்றம் விசாரம் செய்யாமை என்ற ஒழுக்கத்தை கடைபிடிக்க நம் பெருமான் வலியுத்துகிறார்.

-வள்ளலார்.

📑 திருக்குறள்.845.📑
●●●●●●●●●●●●●●●●●●●●

📑 கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்
. 📑

📑பொருள் :அறிவில்லாதவன் கல்லாத நூல்களையும் கற்றவர் போல் மேற்கொண்டு நடந்தால், அவர் குற்றமறக் கற்ற பொருளைப் பற்றியும் மற்றவர்களுக்கு ஐயம் உண்டாகும். 📑
-வள்ளுவர்.

🪔 திருவருட்பா. 🪔
●●●●●●●●●●●●●●●●

மதவாதிகள் வருகை:
🪔பேதை உலகீர்விரதம் ஏதுதவம் ஏதுவீண்
பேச்சிவை எலாம் வேதனாம்
பித்தன் வாய்ப் பித்தேறு கத்துநூல் கத்திய
பெரும் புரட்டாகும் அல்லால்
ஓதைஉறும் உலகாயதத்தினுள உண்மைபோல்
ஒருசிறிதும் இல்லை இல்லை
உள்ளதறியாது இலவு காத்தகிளி போல்உடல்
உலர்ந்தீர்கள் இனியாகினும்
மேதை உணவாதி வேண்டுவ எலாம் உண்டுநீர்
விரைமலர்த் தொடைஆதியா
வேண்டுவ எலாங்கொண்டு மேடைமேல் பெண்களொடு விளையாடுவீர்கள் என்பார்…. 🪔
-வள்ளலார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top