சிறுநீரகக் கல் என்பது என்ன? சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப் பாதையில் அளவுக்கு அதிகமான யூரிக் அமிலம், கால்சியம் போன்ற தாது உப்புகள் தேங்குவதால் உருவாகும் கற்களுக்கு சிறுநீரகக் கற்கள் என்று பெயர்.
அவை சிறுநீர்ப் பாதையில் எங்கு வேண்டு மானாலும் பாதிப்பை உண்டாக்கலாம். அது உங்கள் சிறுநீரகங்கள், சிறுநீர்க்குழாய்கள் அல்லது உங்கள் சிறுநீர்ப்பை என அவை எங்கும் அமைந்துள்ளன. சிறுநீரகக் கற்கள் எவருக்கும் உருவாகலாம். இருப்பினும், சில நபர்கள் மற்றவர்களை விட எளிதில் பாதிக்கப்படுகின்றனர்.
போதுமான தண்ணீர் அருந்தாதது, அல்லது அதிகமாகக் குடிப்பது அல்லது அதிக புரத உணவுகளை உட்கொள்வது, அதிக உப்பு அல்லது சர்க்கரை உட்கொள்வது போன்றவை சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக் கிறது. யூரிக் ஆசிட் கற்கள் நீரிழப்பின் விளைவாகும்.
குறைவான திரவங்களை குடிப்பவர்கள் அல்லது கீழ்வாதம் உள்ளவர்கள் இவற்றால் பாதிக்கப்படு கின்றனர். சிறுநீரகங்கள் அதிக அளவு குறிப்பிட்ட அமினோ அமிலங்களை வெளியேற்றும் போது அவை உருவாகின்றன. சில வகைக் கற்கள் சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றின் காரணமாக உருவாகின்றன.
அறிகுறிகள்
சிறுநீரகக் கற்கள் பற்றிய சில எச்சரிக்கை அறிகுறிகள் இவை. இவற்றில் மூன்றிற்கு மேல் இருந்தால், உடனடியாக உங்களுக்கு மருத்துவம் தேவைப்படும்.
சிறுநீரகக் கற்கள் உள்ளவர்களுக்கு அடிக்கடி குமட்டல் ஏற்படும். வயிறு மற்றும் இடுப்பை நோக்கி கடும் வலி சிறுநீரகக் கற்களின் மற்றொரு அறிகுறி யாகும். இந்தக் கடுமையான வலி சிறுநீரக கோலிக் என்று அழைக்கப்படுகிறது. இளஞ்சிவப்பு, பழுப்பு அல்லது சிவப்பு சிறுநீர் உங்கள் உடலில் சிறுநீரகக் கற்கள் பற்றிய எச்சரிக்கை மணியை ஒலிக்க வேண்டும். இது மேக மூட்டமாகவோ துர்நாற்றம் உடையதாகவோ இருக்கலாம்.
நோயாளிகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தூண்டும். இருப்பினும், சிறுநீர் சிறிய அளவில் வரும், சில சமயங்களில் வெறும் சொட்டுகளாக. சிறுநீர் கழிக்க வேண்டிய அவசியம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். சில நேரங்களில் கற்கள் சிறுநீர் வெளியேறுவதைத் தடுக்க நேரிடலாம். இது சிறுநீர் அடைப்பு மற்றும் ஆபத்தான நிலை. இது சிறுநீரக பாதிப்புக்கு வழிவகுக்கும். சில சமயம் தொற்று உள்ளவர்கள் காய்ச்சல் மற்றும் குளிர்ச்சியால் பாதிக்கப்படுவார்கள்.
சிறுநீரகத்தைப் பாதுகாக்கும் உணவுகள்:
தர்பூசணி
சின்ன வெங்காயம்
காலிஃபிளவர்
மிளகுத்தூள்
பூண்டு
குருதிநெல்லி (கிரான்பெர்ரி)
அவுரிநெல்லி (புளூபெர்ரி)
ஸ்ட்ராபெர்ரி
ஆலிவ் எண்ணெய்
இவை சிறுநீர் நோய்கள் மற்றும் தொற்று நோய்களின் தொடக்கத்தைத் தடுக்கும். இதனால் பாக்டீரியாவின் தோற்றத்தையும் சாத்திய மான பெருக்கத்தையும் தடுக்கிறது.
பச்சை உணவுகள் குறிப்பாக பச்சைச் சாறு குடிக்கவும். தண்ணீர், எலுமிச்சைச் சாறு, கொத்த மல்லி, தேன் சேர்த்து குடிக்கலாம். கீரைகள் தினமும் எடுக்கலாம். போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும். பாஸ்பரஸ் உட்கொள்ளலைக் குறைக்கவும். (குறிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பாஸ்பரஸ் அதிகமாக உள்ளது.) புரோபயாடிக்குகளை (நல்ல பாக்டீரியாக்கள்) தினமும் எடுத்துக் கொள்ளுங்கள். உடல் எடை குறைய, இரத்த அழுத்தத்தைக் கட்டுப் படுத்த, வலி நிவாரணி (றிணீவீஸீ ளீவீறீறீமீக்ஷீ) தவிர்க்கவும். எப்சம் உப்புகளில் குளிக்கலாம். கடினமான உடற் பயிற்சிகளுக்குப் பிறகு தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.
அறிந்து கொள்க!
வள்ளலார் நமக்கு துவரம்பருப்பு மட்டும் போதும் என்று கூறினார்.
மனித குருதியில் பிளாஸ்மா 50% தண்ணீர் நிறைந்தது. WBC RBC plateless 50% 50% அதிக புரதம் எடுத்துக் கொள்ளும் போது பிளாஸ்மா முழுவதும் அமிலமாகிவிடும். நம் உண்ணும் புரதமானது பிளாஸ்மாவில் தான் கரையும்.
அதனால் முதலில் அதிக பாதிப்படைவது சிறுநீரகம் தான். அதிக புரதம் உண்டதால் உண்டான அமிலத்தன்மை மிகுந்த அந்த இரத்தத்தை சிறுநீரகம் சுத்தம் செய்யும். இதனால் சிறுநீரகம் சில ஆண்டுகளில் செயலிலக்கக் கூடும். இதனால் உடம்பு நலிவடைந்து விடும்.
ஒரு நபருக்கு 0.8 g per kg (எடுத்துக்காட்டு) மனித எடை 100 கிலோ இருந்தால் 80 ரீ புரதம் போதும். அதிக புரதம் எடுத்துக்கொள்ளும் போது உண்ட அத்தனை புரதமும் அமிலமாகும். அதனால் சிறிது துவரம் பருப்புப் போட்ட சாம்பாரே போதும் நமக்கு. அதனால் தான் நமது சகலகலா மருத்துவ வல்லுநர் வள்ளலார் துவரம் பருப்பைத் தவிர வேறு பருப்பை நம்மை சாப்பிட அறிவுறுத்துவதில்லை.
கல் உப்பை வறுப்பதா? ஏன்?
கல் உப்பை வறுத்து வைத்துக் கொண்டு, அதன்பின்னர் தான் சமையலில், உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சிறுநீரக பாதிப்புக்கு முக்கிய காரணம் நம்முடைய அஜாக்கிரதைதான். மேலும் சிறு நீரை அடக்குவதால் வரும் விளைவு ஒரு தாய் பத்து மாதம் குழந்தையைப் பெற்றெடுத்த பின் தாயின் அடி வயிறைப் பார்த்தால் வயிறு மடிப்பாக இருக்கும்.
அதே போல் சிறுநீர் பை நிறைந்து பெரியதாக இருக்கும். சிறுநீர் கழித்த பின் சிறுநீர் பை சுருங்கி மடிப்பு ஏற்படும். அந்த மடிப்பில் உப்பு தங்கி விடும். இப்படி தேங்கும் உப்பு தான் சிறுநீரக கோளாறை உண்டாக்குகிறது.
அதே போல் கடற்கரை ஓரத்தில் ஒரு இரும்பு கம்பியை நட்டு வைத்து விட்டு ஒரு வருடம் கழித்துப் பார்த்தால், கடல் உப்புக் காற்று அந்த இரும்பைத் தின்று விடும். அந்த கம்பியைத் தட்டினால் அது கீழே விழுந்து விடும்.
அது மட்டுமல்ல, ஒரு சிறுநீர் கழிப்பிடத்தை கட்டி ஆறு மாதம் கழித்துப் பார்த்தால் அங்கு மஞ்சள் நிறத்தில் தக்கை தக்கையாக கட்டி கட்டியாக உப்பு இருக்கும்.
சமையலுக்கு பயன்படுத்தும் உப்பை அப்படியே பயன் படுத்தக் கூடாது. ஒரு இரும்புச் சட்டியில் போட்டு உப்பை நன்கு வறுக்க வேண்டும். அப்போது உப்பானது பட படவென்று வெடிக்கும். உப்பு இவ்வாறு வெடித்தால் அதில் கலந்துள்ள விஷத்தன்மை நீங்குகிறது என்று அர்த்தம். இப்படி வறுக்கப்பட்ட உப்பைத்தான் உணவுகளில் சேர்க்க வேண்டும்.
உதாரணமாக இரண்டு புதிய இரும்பு சட்டிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு சட்டியில் வறுத்த உப்பையும், மற்றொரு சட்டியில் வறுக்காத உப்பையும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆறு மாதங்கள் இரு சட்டிகளையும் அசையாமல் அப்படியே வைக்க வேண்டும். பிறகு இரண்டு சட்டிகளிலும் உள்ள உப்பை கீழே கொட்டி பார்த்தால் வறுத்த உப்பு இருந்த சட்டி புதிது போல் அப்படியே இருக்கும். ஆனால் வறுக்காமல் போட்ட உப்பு இருந்த சட்டியின் அடியில் துருப்பிடித்து ஓட்டையாக இருக்கும். ஆடாமல் அசையாமல் அப்படியே இருக்கக் கூடிய இரும்பு சட்டியே துருப்பிடித்து ஒட்டையாக போய் விடுகிறது. நம் சிறுநீரகத்தில் ஏற்படும் விளைவுகளும் அதுவே!
அனைவரும் உப்பை வறுத்து சமையலில் பயன்படுத்தி சிறுநீரக பாதிப்பில்லாமல் வாழ, முழு முயற்சி செய்வோம்!
அருள் மருத்துவம் கூறும்
உணவு முறைகளும் பத்தியங்களும்
ராஜ உறுப்புகளில் ஒன்றான சிறுநீரகத்தைப் பாதுகாக்கும் உணவு முறைகளும் பத்தியங்களும் பற்றி நம் அருள் மருத்துவர் தயவு திரு ஜகத்குரு ஐயா நமக்காக (ஹ்ஷீutuதீமீ) வீடியோ பதிவில் வெளியிட்ட அறிவுரை பற்றி இங்கு காண்போம்.
குறிப்பு: எந்த ஒரு சிறுநீரகக் கோளாறானாலும் கீழ்த்தரப்பட்டுள்ள உணவு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். டீ, காபி, வெள்ளைச் சர்க்கரை, அசைவ உணவு, மைதா சார்ந்த உணவுகள், புளி சார்ந்த உணவுகள், ஊறுகாய், அப்பளம் இவைகளைத் தவிர்க்க வேண்டும்.
வறுத்த உப்பு பயன்படுத்த வேண்டும். (கல் உப்பை முருங்கைக் கீரை சாற்றிலோ அல்லது குப்பைமேனி இலை சாற்றிலோ சேர்த்து வறுத்துப் பயன்படுத்த வேண்டும். ஒரு கிராம் அல்லது 1.5 கிராம், இது ஒரு நாளைக்கான அளவு.)
புளிக்குப் பதிலாக நெல்லிக்காய்ப் பொடி பயன்படுத்த வேண்டும். இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட சீரகச் சம்பா பச்சரிசி உண்ணுதல் அதி உத்தமம்.
சுரக்காய் போன்ற நீர்க் காய்களை சிறிதளவு பருப்பு சேர்த்து கூட்டாகச் செய்து உண்ண வேண்டும். சப்பாத்திக்கள்ளி பழம் உட்பட நம் அருகாமையில் விளையும் பழங்களை உண்ணுதல் சிறப்பு.
பொட்டாசியம் அதிகமாக இருக்கும் வாழைப்பழம் மற்றும் மாதுளை இவைகளை தவிர்ப்பது நல்லது. மழைநீர் என்ற புற அமிர்தத்தை நீராக உட்கொள்ளல் சிறப்பு. மழை நீர் கிடைக்காத நேரத்தில் சாதாரண நீரை ஐந்துக்கு மூன்று என்ற அளவில் சுத்தி செய்யப்பட்ட சுக்குப்பொடி இட்டுக் காய்ச்சி அருந்தவும்.
எளிதில் ஜீரணிக்கக் கூடிய இட்லி, பார்லி கஞ்சி, நீர் காய்கறிகள், நெல்லிக்காய் பொடி ரசம், நன்றாக வேக வைத்து மசித்த கீரை வகைகளை உணவாக எடுக்கலாம்.
சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நோயாளியின் உடல் அதிக பித்தம், வெட்டைச் சூடு காரணமாக (youtube) ஹீமோகுளோபின் இவை எல்லாமே குறைந்த நிலையில் காணப்படும். கடுக்காய்ப் பொடி சேர்த்து அரைத்த தேங்காய்ப் பாலை தலைக்கு உபயோகித்து நன்றாக மசாஜ் செய்து குளித்து வர உடல் சூட்டைக் குறைக்கலாம்.
இந்த உணவு முறையையும் பத்தியங்களையும் இடைவிடாது கடைபிடித்தால் யூரியா, கிரியாட்டின் போன்ற உப்புகள் குறைந்து, ஹீமோகுளோபின் அதிகரித்து நோயாளி மீண்டும் மெதுவாக பழைய நிலைக்கு திரும்பி விடுவார்.
Ref : https://youtu.be/de4nY7SqA40?si=v-_lwdTTjYGhlory சிறுநீரக நோயாளிக்கான வள்ளலார் உணவு மருத்துவம் (kidney patient diet)
– தயவு ச. ஜகத்குரு

