இந்தியா, தமிழ்நாடு, கடலூர், மேட்டுக் குப்பம், சித்திவளாகம்.
எண்ணும் எழுத்தும் கற்க, அ, உ அறிய
வருக சித்திவளாகம்.
சத்தியஞான தீப வழிபாடு செய்யுங்கள்.
எண்ணம்போல் வாழ்வு.
அனுபவத்தில் உணர்வோமாக!
சித்திவளாகம் சிறப்பு.
மனிதத்தேகம் எடுத்த ஜீவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய திருத்தலம்.
மற்ற இடங்கள் சந்நிதானம் என்று குறிப்பிட்டால் சித்திவளாகம் மகாசந்நிதானம்.
இவ்விடத்தின் தனிச்சிறப்புகள் என்ன?
வள்ளற்பெருமானார் சித்திப்பெற்ற இடம்.
ஆண்டவர்,
பெருமானார் இருக்குமிடம் வந்து ஒன்றாகக் கலந்துக்கொண்ட தனிச்சிறப்புடைய இடம்.
இங்கு வரும் அன்பர்களுக்கு கோடி கோடி பங்கிற்கு அதிகம் உதவி செய்யும் இடம்.
என்ன உதவி என்றால் இறப்பு, பிறப்பு தவிர்த்து ஆனந்த இன்பத்தில் இருப்பதற்கான, நம்மை ஏறாநிலைமிசை ஏற்றுவிக்கும் உண்மைத் தயவை செய்ய ஏதுவான நிராசையை வழங்குமிடம்.
அது என்ன கோடி கோடி பங்கு என்றால் அது நிராசை என்பது ஆகும்.
இங்கு வந்து தரிசிப்பவர்களுக்கு நிராசைக் குணம் அமையும்.
பூரண ஞானத்திற்கு முன்னுள்ள நிலை நிராசை.
நிராசையின்றி ஞானம் என்பது இல்லை.
ஞானமே இறப்பு, பிறப்பைத் தவிர்க்கும்
நிராசையே உண்மைத் தயவிற்கு அடிப்படை.
தயவே நம்மை ஏறாநிலைமிசை ஏற்றுவிக்கும்.
உண்மைத்தயவே பேரின்ப சித்திப் பெருவாழ் வாம் மரணமிலாப் பெருவாழ்வை சித்திக்க செய்யும்.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நிராசையால் கூடுமே அன்றி ஆசையின்மையால் கூடாது.
அதனால் ஆசைப்படுங்கள்.
ஆசைப்பட்டு அடைந்ததை பிறருடன் பகிர்ந்துக் கொள்ள நிராசை குணம் உடையவர் ஆவோமாக.
சித்திவளாகம் வந்து, தரிசித்து சித்தி பெறும் நன்முயற்சியில் இருந்து வருவோமாக!
- தயவுடன் தனிப்பெருங்கருணை குழு –

