திருக்குறள் சன்மார்க்க உரை-வான் சிறப்பு

-தயவு சீனி சட்டையப்பர் உரை
வான் சிறப்பு : (அருள் மழையின் அருமையைப் பாராட்டுதல்)

  1. வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
    தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
    பொருள்: அருள் மழை வழி வாழ, ஆன்ம கோடிகள் விரும்புவதால் அதுவே அருள் அமுதமாகி ஆனந்தம் ஈகின்றது.
  1. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்
    துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை.
    பொருள்: மழையானது இம்மை மறுமை ஒருமை இன்பத்தவர்க்கு ஏகதேச கடவுள் சொருபமாகிய உணவினை விளைவித்துத் தானும் அமுதநீராகி உயிர்க்கு உதவுகிறது.
  2. விண்இன்று பொய்ப்பின் விரிநீர்
    வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி.
    பொருள்: அருள் மழை அனுபவம் இல்லாமல் போகுமானால் தூல பிரபஞ்சத்தில் அலைக்கழிவு உண்டாகும்.
  3. ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
    வாரி வளங்குன்றிக் கால்.
    பொருள்: அருள் மழையானது அருமை ஆன்ம நேயர்களுக்குக் கிட்டாவிடில் ஜீவகாருணிய செம்பயிர் விளைவிக்க யாரும் ஒருப்படார்.
  4. கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற்
    றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை.
    பொருள்: மருளையும் இருளையும் கெடுத்து உணர்த்துவது அருள் மழை. அதுவே பேரானந்தப் பேற்றிற்கும் உதவும்.
  5. விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது.
    பொருள்: அருள் மழையின் அனுபவப் பதிவுகள் ஒருசிறிதேனும் பெறாவிடில் புல்லும் பூண்டும் நெல்லும் உளுந்தும் விளைவின்றிச் சமுதாய இயக்கம் வீணாகும்.
  6. நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும்
    தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின்.
    பொருள்: அருட் கடலின் அருமை பெருமைக்கு அருள் மழை
    காரணமாகின்றது. அப்படி அல்லாவிடில் கருணைக்
    கடலின் அருமையை யார் உணரப் போகிறார்கள்?
  7. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
    வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
    பொருள்: ஜீவவிளக்கம், ஆன்ம ஞானம் ஆகியவை அருள் மழை பெய்து ஆதரிக்கா விட்டால் தடையாகும்.
  8. தானம் தவம்இரண்டும் தங்கா
    வியன்உலகம் வானம் வழங்கா தெனின்.
    பொருள்: அருள் மழையின் பதிவு இல்லாவிட்டால் உயிர்களுக்கு ஊறு ஏற்படும், புலால் உண்டு பசி நீங்க வழி செய்யும், தவ சீலர், பரம ஏழைகளுக்கு உணவு தராமல் போகும்படியும் ஆகிவிடும்.
  9. நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
    வான்இன்று அமையாது ஒழுக்கு.
    பொருள்: அகப்புற அமுதம் யாவர்க்கும் தேவையானது. அவ்வாறே ஆன்மலாபப் பயிர் விளைய அருள் மழை தேவையாகின்றது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top