அன்புள்ள தோழிகளுக்கு,
வணக்கம். நலம். நலமாக இருக்கிறீர்களா?. வாங்க, நம்மைப் பற்றி கொஞ்சம் பேசலாம். என்ன தான் பெண்கள் முன்னேறிக் கொண்டிருந்தாலும், நம் சமூகத்தில் பெரும்பாலான பெண்கள் இன்றும் வீட்டில் பெரும் பொறுப்புகளைச் சுமப்பவர்களாகவே இருக்கிறோம். வேலைக்குச் செல்லும் பெண்கள் தலையிலோ இரட்டைச்சுமை. எப்போதும் பிறரைக் கவனித்துக் கொள்ளும் நாம், நமக்காக நேரம் ஒதுக்கி நம்மை நாமே கவனித்துக் கொள்ள மறந்து விடுகிறோம். இந்தச் சூழ்நிலையில் நம் உடல் நலம் மற்றும் மன நலம் காப்பது நம்மைச் சார்ந்தவர்களுக்கு நாம் செய்யும் பேருதவியாகும்.
மேம்பட்ட வாழ்விற்காக அன்றாட வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:
- நன்றியுணர்வுடன் வாழ்தல்
- தேவையான அளவு தூக்கம்
- பசித்துப் புசித்தல்
- சத்தான பழங்கள் காய்கறிகளுடன், புரதச்சத்து நிறைந்த சமச்சீரான உணவு உட்கொள்ளுதல்
- நிதானமாக, நன்றாக மென்று உண்ணுதல்
- யோகம், நடைப் பயிற்சி போன்ற உடற்பயிற்சிகள் செய்தல்
- மூச்சுப்பயிற்சி செய்தல்
- தியானப் பயிற்சி செய்தல்
- நண்பர்களோடு மனம் விட்டுப் பேசுதல்
- மனதைப் பாதிக்கும் தொலைக்காட்சித் தொடர்களைத் தவிர்த்தல்
- பிறருக்கு ஏதோ வகையில் உதவுதல்
- ஏதாவது ஒன்றைப் புதிதாகக் கற்றுக் கொள்ளுதல்
- நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கம்
- தேவைக்கு மட்டும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல்
- நல்ல பொழுதுபோக்குகள் வைத்துக் கொள்ளுதல்
- ஆண்டுக்கொருமுறை மருத்துவப் பரிசோதனை செய்தல்
- எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யாமல், நம்மால் இயன்ற வேலைகளைச் செய்து மன நிறைவுடன் வாழ்தல்
- தீமை செய்பவர்களை மன்னிக்க முயற்சி செய்தல்
- உலக நடப்புகளை அறிந்து கொள்ளுதல்
- முடிந்தால் புது இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டு அறிவை விரிவடையச் செய்தல்
எல்லா உயிர்களும் ஒன்று என்பதை உணர்ந்து, நம்மைக் காத்து, நம் குடும்பத்தையும், சமூகத்தையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வோம்

