சுத்த சன்மார்க்க விளக்கம்(பகுதி-2)

நலம் சூழ்க!
இயற்கைத் தொன்மையாம் சுத்த சன்மார்க்கம் வள்ளல் பெருமானாரால் துலங்குவதற்கு முன், அனைத்துவகை கடவுளர்களுக்கும் கருணை மட்டுமே கற்பிக்கப்பட்டு இருந்தது. இங்கு, இன்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் தனிப்பெருங்கருணையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
பெருமானார், ஆதி நீதி ஆருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை முழுமையாய் உணர்ந்தார், அறிந்தார், ஆண்டவரே வந்து அவரை அனைந்து, அருள் ஆட்சியைத் தந்தார்.
நாமும் பெற என்ன செய்வோம்?
பெருமானார் பட்டப்பாட்டை உணர்வோம்.
உணர்ந்தால்…..
அவரிடம் அன்பு செய்வோம்: ஜீவர்களிடத்துத் தயவு செய்வோம். அப்படி என்றால் நாம் இப்பொழுது செய்து வருவது என்ன என்பது நாமே உணர்ந்து கொள்ளலாம்.
நாம் உண்மையான நிலைக்கு வரும்பொழுது பெருமானார் நம்முடன் எப்பொழுதும் இருந்து வழி நடத்திக்கொண்டு இருப்பதை உணர்ந்து, அறிந்துகொள்வோம். இதுவே தனிப்பெருங்கருணை.
நம் ஒவ்வொருவரிடத்தும் அவர் நம்முடன் அனைத்துமாய் இருந்து வருகின்றது உணரும்பொழுதே நாம் அவரிடத்து அன்பு செய்யக்கூடும். சாருலக வேதனையைத் தவிர்த்து, உத்தம சற்குரு சொற்களைக் கேட்டு, நடந்து, ஏறாநிலைமிசை ஏறி, அதிதீவிர கருணை நன்முயற்சியில் இருந்து வருவோம்.
அதனால் உத்தமன் ஆவோம்! ஓங்குவோம்!
இன்று நாம் அனுபவிக்கும் அனைத்திற்கும் அடிப்படை நமது அறிவும் அனுபவமும் கடவுளது அறிவும் அனுபவத்திற்கு மாறுபட்டு இருப்பதே காரணம். நமது அனுபவம் நம் உடல், மனம் சார்ந்து, கற்பிக்கப்பட்ட, கற்றுக்கொண்ட நன்மை தீமை, பாபம் புண்ணியம், லாபம் நஷ்டம், இன்பம் துன்பம் எனப் பேதப்படுவதே காரணம். கடவுளரின் அறிவு அனைத்தும் அறிவு விளக்கமாகவும் அனுபவம் கருணையாகவும் இருந்து வருவதுபோல் நமது அறிவும் அனுபவமும் எவ்வுயிரும் பொது எனக்கண்டு உபசரிக்கும் செயலாக அமைந்து விளங்க, என்றும் ஆனந்தமே!
நலம் நிறைக!

அனுபவத்தில் “ஓர்மை”

ஆண்டவரின் இயக்கமாகிய அருளே அறிவு விளக்கம்.
அருளே அனைத்துமாக உள்ளது. நமக்குள்
ஆண்டவரின் அனுபவம் தனிப்பெருங்கருணை.
முன்னுள்ள மார்க்கங்களில் விதி எனப்பட்டது
சுத்த சன்மார்க்கத்தில் ஞானமானது.
விதியில் அறிவும் அனுபவமும்
வேறு வேறாக பேதமானது.

சுத்த சன்மார்க்கத்தில்
அறிவும் அனுபவமும் ஒன்றானது.
அதனால் அது தனிப்பெருங்கருணையானது.

அறிவு, இரக்கம், தெய்வம்.
அனுபவத்தில் நான்.

அன்பு, தயவு, கடவுள். அனுபவத்தில் தான்.

அருள், கருணை, ஆண்டவர். அனுபவத்தில் அது.
இவை முன்னுள்ள மார்க்க நிலை ஆகும்.

சுத்த சன்மார்க்கத்தில்
பேரருள், தனிப்பெருங்கருணை,
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.
அனுபவத்தில் “ஓர்மை.”

எல்லாவற்றிற்கும் அதீதமானது
சுத்த சன்மார்க்கம்.

ஒத்தாரும், உயர்ந்தாரும், தாழ்ந்தாரும், எவரும்
ஒருமையுளராகி உலகியல் நடத்த வேண்டும்
என்பதே சுத்த சன்மார்க்கம்.

ஒருமை கொள்ளவில்லையெனில் பேதா பேதம் பார்ப்பதும், வேறுபாடான சிந்தனைகளும், செயல்பாடுகளும் இயல்பாகிவிடும்.

ஒருமையுளராகி உலகியல் நடத்த அறிவும் ஒழுக்கமும் பொருந்தவேண்டும்.
அறிவும், ஒழுக்கமும் பொருந்த சத்விசாரமும், ஜீவகாருண்யமுமே சாதனங்கள்.

–தயவுடன் சுயம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top